அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலருக்கு கட்சியில் இருந்தே கல்தா! ஜெயலலிதா அறிவிப்பு!!
அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலர் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டு களங்கம் ஏற்படுத்தியதால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அ.தி.முக.வின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், பின்வரும் பட்டியலில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை புறநகர் மாவட்டம், வால்பாறை நகரத்தைச் சேர்ந்த வால்பாறை சட்டமன்றத் தொகுதிக் கழக இணைச் செயலாளர், நகர மாணவர் அணிச் செயலாளர், 12-வது வார்டு கழகச் செயலாளரான ஆர்.சண்முகவேல், நகர மீனவர் பிரிவுச் செயலாளர் எம்.அபுபக்கர், 11-வது வார்டு கழகச் செயலாளர் கே.வி.குஞ்சாவி, பச்சமலை எஸ்டேட் தெற்கு கிளைக் கழகச் செயலாளர் ப.மு.சி.இளங்கோவன், ராஜீவ் காந்தி நகர் கிளைக் கழகச் செயலாளர் டி.வி.விஜயராஜன் ஆகியோர் இன்றுமுதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது. இவ்வளவு பேருமாக சேர்ந்து எப்படி களங்கம் ஏற்படுத்தினார்கள் என்று விளக்கம் கொடுக்கப்படவில்லை.
No comments:
Post a Comment