இலங்கை கடற்படையினர், தமிக மீனவர்களை அடிக்கடி தாக்குவதை கண்டித்து ராமேஸ்வரத்தில் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் டெசோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், இன்று காலை டெசோ அமைப்பு சார்பில் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதேபோன்ற ஆர்ப்பாட்டம் நாளை நாகையிலும் நடைபெறவுள்ளது.
டெசோ அமைப்பு சார்பில், மீனவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளான ராமேஸ்வரத்திலும், நாகையிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த டெசோ கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டம் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நடைபெற்றதால், இதில் பங்கேற்றவர்கள் தங்கள் சார்ந்த கட்சி கொடியை கொண்டு வரவில்லை.
No comments:
Post a Comment